Tuesday, January 10, 2012


                                             காலம் மாறிப் போச்சு ...............

உலகில் அதிகரித்து வரும் சனத்தொகையின் உணவுத்தேவையை பூர்த்தி செய்வதற்கு உணவு உற்பத்தி அதிகரிக்கப்படவேண்டும் என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒரு வெளிப்படையான உண்மையாகும.;  அதிகரித்துவரும் மக்களின் உணவுத்தேவையை ஈடுசெய்யும் முகமாக விளைச்சலை அதிகமாக்குவதற்கு நைதரசன் வளமாக்கி உயர்விளைச்சலை தரக்கூடியதாக அறிமுகப்படுத்தப்படுகின்றது. இவ்வாறு பெறப்பட்ட பயிரினங்களின் தன்டு இலைப்பகுதிகள் மிகவும்   சாற்றுத்தன்மையாக காணப்படுவதனால் இலகுவாக பூச்சி பீடைத்தாக்கங்களுக்கு உட்படுகின்றன. இதனால் விவசாயிகளுக்கு பாரிய நஸ்டம் ஏற்படுகின்றது. இந்தப்ப+ச்சித்தாக்கங்களை கடடுப்படுத்த இந்த நூற்றாண்டின் இடைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதோ  பீடைநாசினி ஆகும் இது சூழலுக்கு பல பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துகின்றது.
செயற்கையாகத்தொகுக்கப்பட்ட பீடைநாசினியின் பாவனையினால் புவியின் மண்வளம் குன்றிப்போகின்றது. உணவு நஞ்சாக்கம் நீர்நிலைகள் வளிமண்டலம் என்பன மாசடைகின்றன. இப்பீடைநாசினி விசிறப்பட்ட உணவுப்பொருட்களை மனிதன் உணவாக உட்கொள்ளும்போது ஆபத்தான நோய்க்கான காரணங்களுக்கு உட்படுகின்றார். ஆனால் இவற்றை எல்லாம் அறிந்தாலும் தற்போதைய விவசாயிகள் இதனை கவனத்தில் கொள்ளவில்லை அவர்கள் தமது விளைச்சலை பெருக்குவதற்காக இப்பீடைநாசினிகளை பயன்படுத்துகிறார்கள் இப்பீடைநாசினிகளை பயன்படுத்துவதனால் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் மண்புளு போன்ற உயிரினங்கள் அழிவடைகின்றன. இதனால் உணவுச்சங்கிலியில் மாற்றம் ஏற்படுகின்றது.
 ஈனால் ஆரம்பகாலத்தில் மாட்டினால் வயல் உழுது வீட்டில் பெருகும் குப்பை கூழங்களை பசளையாக்கி விவசாயம் செய்யப்பயன்படுத்துகின்றனர் பின்னர் தாவரத்தில் ஏற்படும் நோய்;த்தாக்கங்களுக்கு எருதின் சலம் மற்றும் சாணம் என்பவற்றை தெளித்தனர்  வயலில் காணப்படும் களையினைப்பிடுங்க மனித உழைப்பு அங்கு பயன்படுத்தப்பட்டது அதன் பின் நெல் அறுவடை செய்வதற்கும் சூடு மிதிப்பதற்கும் மனித உழைப்பே பயன்பட்டது.  இதனால் உயிரினங்களுக்கோ மனிதனுக்கோ பாதிப்பு குறைவாகவே காணப்பட்டது. ஆனால் இப்பொழுது காலம் மாறிவிட்டது .
வயலினை உழுவதற்கு உழவு இயந்திரம் நெல் வளர்வதற்கு செயற்கையாக தயாரிக்கப்பட்ட பசளை பின் நோய்த்தாக்கங்களில் இருந்து பயிர்கள் விடுபடவும் களைகள் அகற்றவும் பீடைநாசினி அறுவடை செய்ய அறுவடை இயந்திரம் என தற்போது மனித உழைப்பு குறைந்து இயந்திரங்களின் உழைப்பு அதிகரி;த்து செல்கின்றது. இதனால் மனிதனின் செயல் திறன் குறை வடைந்து வருகின்றது . முன்னைய விவசாயிகளுக்கும் தற்போதைய விவசாயிகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என விபரிக்கின்றார். 80 வயதுடைய வீரகத்தி சின்னத்துரை
“எனக்கு இப்போ 80 வயதாகின்றது நான் சிறுவனானாக இருக்கும்போது எனது தந்தையுடன் தோட்டத்திற்கு செல்வேன் எங்கள் தோட்டம் 8ஏக்கரில் இருக்கின்றது ஒருபக்கத்தில் கத்தரி கீரை மறுபக்கத்தில் வெண்டி புடோல் என எல்லாப்பக்கங்களும் காய்கறிகளாகவே இருக்கும் அப்போது இப்பமாதிரி சுவிச்போட்டவுடனே தண்ணிவராது துலாமிதித்துதான் தண்ணிகிள்ளிதோட்டத்திற்கு நீர்பாய்ச்சவேண்டும். பசளை எல்லாம் வீட்டில் உள்ள குப்பைகள் எல்லாம் சேர்த்து கடகத்தில் நிரப்பி  தலையில் சுமந்து சென்றுதான் தோட்டத்திற்கு பசளை போடுவோம் அந்தக்காலத்தில் எல்லாம் இயற்கையினை கொண்டு பயன்பெறுவதாலேயே எந்த நோயும் இல்லாமல் 80வருடம் தேக ஆரோக்கியத்துடன் வாழ்கிறேன் இப்ப எடுத்ததற்கெல்லாம் செயற்கையான பொருட்களை பயன்படுத்துவதால் மனிதன் உழைக்கின்ற காசு அரைவாசி வைத்தியசாலைக்கே கொடுக்கின்றான் இப்ப எல்லாம் இயந்திரம் என்பதனால் மனிதன் சோம்பேறி ஆகிவிட்டான் இதனால் அவன் பல நோய்களுக்கு உள்ளாகின்றான்.



 

Wednesday, January 4, 2012

தெல்லிப்பழை மாவிட்டபுரத்திழல் 21 வருடங்களின் 1

தெல்லிப்பழை மாவிட்டபுரத்திழல் 21 வருடங்களின் பின் மக்கள் மீள் குடியமர்த்தப்பட்டுள்ளனர ;;இவர்கள் அடிப்படை வசதிகள் அற்ற நிலையிலோயோ  மீள் குடி அமர்த்தப்பட்டுள்ளனர் ; 21 வருடங்களின் பின் தற்போது தான் மக்கள் தமது இடங்களை பார்க்க அனுமதி அளிக்கப்பட்டது தமது சொந்த இடத்திற்க்க வந்து விட்டோம் என்கின்ற சந்தோசமும் 21 வருடங்களுக்கு முன் உயிரினை கையில் பிடித்தபடி சிதறிப்போன உறவுகளையும் கண்டுவிட்ட ஒரு சந்தோசத்தில் இம்மக்கள் காணப்படுகின்றனர்.
தமது 21வருடக்கனவு நிறைவேறிவிட்டது என தமது ஊரைப்பார்க்க வந்தவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது ஏனெனில் ஊர்முழுவதும் பற்றைக்காடுகளாக காட்சி அளித்ததுடன் வீடுகள் பல தரைமட்டமாக்கப்பட்டிருந்தன. தமது  தலைவிதியை நொந்நபடி தமது இடிந்த வீடுகளில் கற்களை பொறுக்கி குவித்தபடி இருந்தனர் மக்கள்.
21 வருடங்களாக வாடகை வீட்டில் இருந்து தமது உழைப்பின் முக்கால்வாசிப்பங்கினை வாடகைக்கு  கொடுத்து முடித்து மிகுதியை தமது செலவிற்கு பயன்படுத்தி மிச்சம் இல்லாமல் வாழும் பல குடும்பங்கள் தமது சொந்த வீடுகளை திருத்தமுடியாமல் அரசாங்கத்தினையே நம்பி இருக்கின்றனர் ஆனால் அரசாங்கம் வீட்டுத்திட்டம் தருகிறோம் வீடு திருத்தித்தருகின்றோம் என வாய்ச்சொல்லினால் சொல்லுகின்றார்களே தவிர அந்த உதவி ஒன்றுகூட எங்களை வந்தடையவில்லை என மக்கள் தெரிவித்தனர் .நீர் இறைக்கும் இயந்திரத்திற்கு மின்சாரம் தேவை ஆனால் மீள்குடியேற்றப்பட்டு மூன்று மாதங்களாகியும் மின்சாரம் வழங்கப்படவில்லை  இதனால் மக்கள் இரவில் நடமாட முடியாமல் தவிக்கின்றனர
தெல்லிப்பழையில் தனது வெறும் காணியில் குடிசை வீடு போடுவதற்காக தகரத்தினை பெற வந்திருந்த    வைரமுத்து அன்னலட்சுமி வயது 70 என்பவரை நோர்கானல் செய்த போது
“நான் இப்ப அளவெட்டியில் இருக்கிறன.; என்னுடைய கணவர் 1993ல் இறந்துவிட்டார். நானும் எனது உடல்நலமற்ற மகன் மகாலிங்கமும் தான் இருக்கிறோம் மகனால் வேலைக்கு போகமுடியாது எங்களுக்கு கிடைக்கும் ஒரே ஒரு வருமானம் அரசாங்க உதவிப்பணமான 150 ரூபாய் தான் இதைக்கொண்டு என்னவாங்கமுடியும் சிலவேளைகளில் எனது மகள் பண உதவி செய்வாள் நாங்கள் அளவெட்டியில் ஒரு இடிந்தவீட்டில் வசிக்கின்றோம் இப்ப எங்களுடைய இடம் விட்டதால எனக்கு இங்கை இருக்கின்ற வெறும் காணிக்குள் சிறு குடிசைபோட்டு வசிப்பதற்கு  கிராம அதிகாரியிடம் தகரம்கேட்டு கவலையுடன்  காத்திருக்கும் மூதாட்டி.
தம்பையா கனகரத்தினம் வயது55 இவர் தெரிவிக்கையில்நாங்கள் எங்கட இடத்தை விட்டுச்சென்று தற்போது 21வருடங்கள் ஆகிவிட்டது இப்பொழுதுதான் மீள்குடியேறியுள்ளோம் எமக்கு எங்கள் சொந்த இடத்திற்கு வந்தது சந்தோசமாக இருக்கின்றது .
எங்கள் வீடு இடம்பெயர்வதற்கு 1மாதத்திற்கு முன்தான் புதிதாகக்கட்டி குடிபுகுந்தோம் இப்பொழுது எங்கள் வீடு தரைமட்டமாகிவிட்டது . இனி எம்மால் ஒரு புதிய வீடு கட்டமுடியாது அவ்வளவிற்கு எமக்கு வசதி இல்லை நான் மேசன் வேலை செய்துதான் எனது குடும்பத்தை காப்பாற்றுகின்றேன். நாங்கள் இடம்பெயர்;ந்த நாளில் இருந்து வாடகை வீட்டில்தான் வசித்து வருகின்றோம். .எனது வருமானத்தை நம்பியே எனது குடும்பம் இருப்பதனால் எனது பிள்ளைகளின் கல்விக்கும், வாடகைக்கும் .எமது குடும்ப செலவிற்கும் ஏற்றதாக இல்லை இதில் எம்மிடம் சேத்துவைத்த பணமும் இல்லை இதனால் எங்களால் வீடுகட்டமுடியாது அரசாங்கம் வீடுகட்டித்தந்தால்தான் எம்மால் இங்கு வரமுடியும் தற்போது எமக்குவீட்டுத்திட்டம் கிடைத்தள்ளது அந்த வீடு கட்டி முடித்தால்தான்.  நாங்கள் எங்கள் குடும்பத்துடன் இங்கு வரமுடியும்
இவர்கள் கனவு எப்போது நிறைவேறும்??????????